வினோத் குமார் அவர்கள் (பிறந்த தேதி: மார்ச் 30, 1980) ஆசிரியராக இந்தியாவில் பணிபுரிகிறார். இவர் அச்குண்டிங் Accounting Education மற்ற...
வினோத் குமார் அவர்கள் (பிறந்த தேதி: மார்ச் 30, 1980) ஆசிரியராக இந்தியாவில் பணிபுரிகிறார். இவர் அச்குண்டிங் Accounting Education மற்றும் SVTuition என்ற இரு இணையதளங்கள் வழியாக இலவசமாக கல்வி மற்றும் இலாபம் நோக்கம் இல்லாத தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
முந்தைய வாழ்வும் படிப்பும்
ஆசிரியர் வினோத் குமார் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ முக்ட்சர் சாஹிப் என்ற ஊரில் பிறந்தார். இவர் தன்னுடைய வணிக இளங்கலை பட்டபடிப்பை (B.Com) பஞ்சாப் பல்கலைகழகத்தில் 2001 ஆம் ஆண்டும் முதுகலை பட்டபடிப்பை (M.Com) H.P. University ல் 2004 ஆம் ஆண்டும் முடித்திருக்கிறார். இவர் கணிணி அறிவியலில் NIIT ல் பட்டமும் பெற்றிருக்கிறார்.
பணித்துறை
இவர் தன்னுடைய பணியை 2001 ஆம் ஆண்டு பகுதி நேர ஆசிரியராக S.O.S. Chilldren Village of India என்ற நிறுவனத்தில் தொடங்கினார். இவர் செய்தித்தாள் போடுபவராகவும், பள்ளி அறிவியல் நிபுணராகவும், தொண்டு செய்பவராகவும், விற்பனையாளாராகவும், இயற்கை மருத்துவ வல்லுநராகவும், தொண்டர்-ஆசிரியராகவும், தணிக்கை
உதவியாளராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிரார். இவர் தனது சொந்த கல்வி நிறுவனமான Swami Vivekanand Institute of Commerce முலம் வணிகம் மற்றும் வணிக கணித்தை கடந்த 10 ஆண்டுகளாக பயிற்று வித்திருக்கிறார்.
ஆசிரியர் வினோத் குமார் ஜனவரி 2008 ல் Accounting Education என்ற இலாபம் நோக்கம் இல்லாத வணிக கணித்தை அடிப்படையாக கொண்ட நிறுவனத்தை தொடங்கி தொண்டாற்றி வருகிறார். இவர் வணிக கணிதம், நிதியகம் (Finance), தற்போதைய கல்வி, தொழில் சார்ந்த, வணிக கணித மென்பொருள் பற்றி எழுதி வருகிறார். இவை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், வணிக கணக்காளர்களுக்கும், நிதி மேலாளர்களுக்கும் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. இவர் 2010
ஆம் ஆண்டு இறுதியில் தன் சொந்த கல்வி நிறுவனத்தை விட்டு விட்டு தன் முழு கவனத்தையும் தன்னுடைய கல்வி இணையதளத்தில் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
Accounting Education பற்றி
Accounting Education ஒரு இலாப நோக்கம் இல்லாத நிறுவனமாகும். இதன் குறிக்கோள் உலக தரத்தில் வணிக கணிதம் மற்றும் நிதி தொடர்பான கல்வியை இலவசமாக வழங்குவதேயாகும். நாங்கள் எங்களுடைய 2000 த்துக்கும் மேற்ப்பட்ட கல்வி சம்மந்தமான கட்டுரைகளுக்கும், வீடியோவுகளுக்காகவும் உலகம் முழுவதும் அறியப்படுகிறோம்.
Accounting Education ஆசிரியர் வினோத் குமார் அவர்களால் ஜனவரி மாதம் 19 ஆம் நாள் 2008ல் தொடங்க பட்டது. இது இப்பொது மிகவும் பிரபலமாகவும் வணிக கணித வல்லுனர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,
தொழில் நிறுவனங்களுக்கும் மற்றும் தொழில் முனைவோர்களுக்கும் மிகவும் பயனுள்ள கல்வி நிறுவனமாகவும் இருந்து வருகிறது.
இதன் முக்கிய குறிக்கோள் வணிக கணிதம், வரி, நிதி, Tally Software, கம்ப்யூட்டர் தொடர்பான வணிக கணிதம் மற்றும் தொழில் சார்ந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வு காண்பதாகும். இது மிகவும் அனுகூலமான வணிக கணிதம், நிதி மற்றும்கல்வி சம்பந்தமான நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுத்தருகிறது.
Accounting Education வணிக கணிதம், Tally கேள்விகள், பாடங்கள், பணி மற்றும் அனைத்தும் அடங்கிய ஒரு தளமாக விளங்குகிறது.
Accounting Education கம்ப்யூட்டர் பொழுதுபோக்காளர்கள், மாணவர்கள், வணிக கணித வல்லுனர்கள், வணிக ஆசிரியர்கள், பட்டய கணக்காளர்கள், தொழில்முனைவோர்கள், பத்திரிக்கை எழுத்தாளர்கள் ஆகியோரால் விரும்பி படிக்கப் படுகிறது. இது மாணவர்களுக்கு இணையவழி வணிக கணித்தை சொல்லி கொடுக்கிறது.
நீங்கள்இந்த தளத்தின் மூலம் பயன் பொற்றிருந்தால்உங்களுடைய ஆலோசனைகளையும் உதவிகளையும் நாங்கள் வரவோற்க்கிறோம். முற்றிலும் இலவசமான இணையவழி கல்வியை உலகம் முழுவதும் தர எங்களுக்கு உதவுங்கள்.
SV Tuition பற்றி
SV Tutition ஆசிரியர் வினோத் குமார் அவர்களால் ஜனவரி 2012ல் ஆரம்பிக்கபட்டது. Accounting Education னை விட இது மிகவும் அதிகமான பயனுள்ளது. நீங்கள் கீழ்வரும் கல்வி சம்பந்தமானவற்றை இலவசமாக SV Tuition என்ற இணைய தளத்தில் பெறலாம்.
1. 2500 க்கும் மேற்ப்பட்ட இலவச வணிக கணிதம், நிதி, கல்வி, மேலாண்மை, பொருளாதாரம், கணிதம், Information Technology தொடர்பான கட்டுரைகள்அடங்கியுள்ளன. அனைத்தும் SV Tuition க்கு சொந்தமானவை.
2. 500 க்கும்மேற்ப்பட்ட கல்வி தொடர்பானஇலவச தீர்வுகள்அடங்கியுள்ளன.
3. 500 க்கும்மேற்ப்பட்ட கல்வி தொடர்பானஇலவச வீடியோக்கள்அடங்கியுள்ளன.
4. ஒவ்வொரு மாதமும்நீங்கள்ஒரு இலவச அனிபளிப்பைநாங்கள்தரும் Exam மில்பங்கு பெற்று வெற்றி பொறலாம்.