Archive Pages Design$type=blogging

ஐந்தொகை

இந்திய கம்பெனி சட்டம் 1956, ஒவ்வொரு நிறுவனமும் அதனுடைய இருப்புநிலை குறிப்பை (Balance Sheet) தயாரிக்க வலியுறுத்துகிறது.  ஒவ்வொரு நிறுவனமும...

இந்திய கம்பெனி சட்டம் 1956, ஒவ்வொரு நிறுவனமும் அதனுடைய இருப்புநிலை குறிப்பை (Balance Sheet) தயாரிக்க வலியுறுத்துகிறது.  ஒவ்வொரு நிறுவனமும் தனது இருப்புநிலை குறிப்பை இந்திய கம்பெனி சட்டம் 1956 அட்டவணை ஆறாம் பாகம் பகுதி ஒன்றில் கொடுக்கப்பட்ட படிவத்தின் படி தயார் செய்ய வேண்டும்.  ஒரு நிறுவனம், இருப்புநிலை குறிப்பின் சுருக்கத்தை வடிவம் செய்யலாம்,  ஆனால் அது பல்வேறு கூறுகளை விளக்கம் கொடுக்கும் அதன் அட்டவணைகளை இணைக்க வேண்டும். நாங்கள் மாணவர்களுக்கு நிறுவனத்தின் இருப்புநிலை தயார் செய்வதற்க்கு பயனுள்ளதாக இருக்கும், நிறுவனத்தின் இருப்புநிலை பல்வேறு கூறுகளை விளக்குகிறோம்.


[* பகுதி 211 கீழ் இருக்கும் இருப்புநிலை குறிப்பின் வடிவை நினைவில் கொள்ளவும்]
நீங்கள் இருப்புநிலை குறிப்பு மற்றும் அதன் அனைத்து கூறுகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.  இருப்புநிலை குறிப்பை கிடைமட்ட அல்லது செங்குத்து படிவமாக உருவாக்க முடியும். ஆனால் சொத்துக்களின் கூட்டுத் தொகையும் மொத்த கடன் பொறுப்புகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருக்க வேண்டும். இங்கே, நான் இந்த கூறுகளை விளக்கி இருக்கிறேன்.
இருப்புநிலை குறிப்பில் சொத்துக்களின் பக்கம்

சொத்துக்கள் நிறுவனத்தின் இருப்புநிலை குறிப்பில் வலது பக்கமாக எழுத படுகிறது. இந்த சொத்துக்களில், நாம் சேர்த்து கொள்பவை.

  1.   நிலையான சொத்துக்கள்
     
நாம், வாங்கிய மற்றும் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து நிலையான சொத்துக்களையும் காண்பிப்போம். இந்த நிலையான சொத்துக்கள் நிறுவனத்தின் நீண்ட கால செலவு ஆகிறது. இந்த சொத்துக்களில், நாம் சேர்த்து கொள்பவை.


  • மனை
  • கட்டிடம்

  • I இயந்திரத் தொகுதியும் இயந்திர நிலையமும்
  • மரச்சாமான்கள் மற்றும் சேர்மானங்கள்
  • கட்டு குத்தகை சொத்துக்கள்
  • சொத்துகள் அபிவிருத்தி
  • வாகனங்கள்
  • கால்நடைகள்
  • ரயில்வே கிளைபாதைகள்
  • உபகரணங்கள்
மனை
I)
நாம் நிலையான சொத்துக்கள் தலைப்பில் அருவ அல்லது புலனாகாத சொத்துக்களையும் சேர்ப்போம். அருவ சொத்துகளில் முக்கிய உதாரணங்கள் பின்வருவன.


I) நன்மதிப்பு
II) காப்புரிமை
III) வணிக முத்திரைகள் மற்றும் வடிவமைப்பு

நிலத்தின் மதிப்பு சிறிது நேரம் கழித்து அதிகரிக்கும் என்பதால் தேய்மானம், நிலம் தவிர ஒவ்வொரு நிலையான சொத்து மீதும் கணக்கிடப் படுகிறது.   இங்கே, ஒரு ஆண்டில் வாங்கப்பட்ட அல்லது விற்கப்பட்ட பல்வேறு நிலையான சொத்துக்களின் நிகர மதிப்பை கணக்கிட வேண்டும் என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.  பின்வரும் அட்டவணை தீர்வின் குறிப்பு பகுதியாக இருக்கும்.


ஆண்டு ஆரம்பத்தில் நிலையான சொத்தின் மதிப்பு


கூட்டு: புதிய நிலையான சொத்துகளின் வாங்கிய மதிப்பு

XXX


XXX



XXX

கழி: சொத்துகள் விற்றது
XXX


XXX

கழி: தேய்மானம்


    அனைத்து பழைய சொத்துக்களின் தேய்மானம்


    கழி: விற்கப்பட்ட சொத்துக்களின் தேய்மானம் விற்பனை காலத்திற்க்கு பிறகு




XXX


XXX

XXX









XXX
    கூட்டு: புதிய நிலையான சொத்துக்களின் தேய்மானம்
XXX


தேய்மானம் திருத்தங்களுக்கு பின்னர்



XXX

நிலையான சொத்துக்களின் நிகர மதிப்பு
XXX


2. இருப்புநிலை குறிப்பில் முதலீட்டை கையாளும் விதம்
முதலீடு என்பது வட்டி அல்லது இலாப வருமானம் பெறுவதற்கான நிதி முதலீடு ஆகும். எனவே, இது நிறுவனத்தின் சொத்து ஆகையால் இது சொத்துக்களின் பக்கம் சேர்க்க படுகிறது. பின்வருவபன முக்கிய முதலீடுகள்.

  1. அரசு அல்லது நம்பிக்கை பத்திரங்கள்
  2. பங்குகள், கடன் பத்திரங்கள் அல்லது கடன் ஈட்டு வணங்கள்


இருப்புநிலை குறிப்பில் முதலீடை காட்டும் போது பின்வருவனவற்றை மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

i) முதலீட்டை முழுமையாக செலுத்திய பங்குகளையும் பாதியாக செலுத்திய பங்குகளையும் தனித்தனியாக காண்பிக்கவேண்டும்.
ii) துணை நிறுவனத்தின் முதலீட்டு பங்குகளையும் வேறு எந்த நிறுவனத்தில் செய்த முதலீட்டையும் தனித்தனியாக காண்பிக்கவேண்டும்.

iii) அசையா சொத்துக்களின் முதலீடு.

) கூட்டாண்மை நிறுவனங்களில் செய்த மூலதன முதலீடு.

முதலீட்டை அதன் அடக்கவிலை அல்லது சந்தை மதிப்பு இவற்றில் எது குறைவாக இருக்கிறதோ அதன் மதிப்பை காண்பிக்க வேண்டும்.

3.  இருப்புநிலை குறிப்பில் நடப்பு சொத்துக்கள், கடன் மற்றும் முன்பணமும் கையாளும் விதம்
A)   நடப்பு சொத்துக்கள்

நடப்பு சொத்துக்களை தனி தலைப்பில் காண்பிக்க வேண்டும் மற்றும் பின்வரும் கூறுகள் அதில் சேர்க்கப்படும்.

i)                    வணிக சரக்கு இருப்பு
ii)                   வேலையின் தொடர்ச்சி
iii)                 பலசரக்கு இருப்பு
iv)                 தளர்வான கருவிகள் இருப்பு
v)                  வழங்கீட்டுப் பொருள் சேகரம் மற்றும் உதிரி பாகங்கள் இருப்பு
vi)                 சில்லரை கடனாளிகள் கழி: சந்தேகமான கடன்களுக்கான ஒதுக்கீடு
vii)           கையிருக்கும் ரொக்கபணம்
viii)         வங்கி இருப்பு
a) அட்டவணையிடப்பட்ட வங்கிகள்
b) மற்ற வங்கிகள்

B)      கடன் மற்றும் முன்பணம்

நிறுவனம் மற்றவர்களுக்கு கொடுத்த கடன் அல்லது முன்பணம், சொத்துகள் பக்கத்தில் காண்பிக்கப்படும். அதன் முக்கிய உதாரணங்கள் பின்வருவன:

a)      துணை நிறுவனத்திற்க்கு கொடுத்த கடன் மற்றும் முன் பணம்
b)      கூட்டு நிறுவனத்திற்க்கு கொடுத்த கடன் மற்றும் முன் பணம்
c)       செலவாணி பட்டியல் / வரவுகள் பட்டியல்
d)      முன்கூட்டியே செலுத்திய செலவுகள்
e)      வெளி வருமானம்

4. இதர செலவுகள்

தள்ளுபடி செய்யாத செலவுகள் இருப்புநிலை குறிப்பில் சொத்து பக்கத்தில் காண்பிக்கப்படும். இந்த செலவுகளுக்கு சந்தை மதிப்பு இல்லை எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன.

i)                    ஆரம்ப செலவுகள்
ii)                   பங்குகள் அல்லது கடன் பத்திரங்களுக்கு சந்தா பெற்றதற்காக கொடுக்கபட்ட தரகு
iii)                 பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் வழங்கீட்டிற்கு கொடுக்கபட்ட தள்ளுபடி
iv)                 கட்டமைப்பு நேரத்தில் மூலதனத்திலிருந்து கொடுக்கபட்ட வட்டி
v)                  அபிவிருத்தி செலவினம்  

5. இலாப நட்ட கணக்கு

நிறுவனத்தின் அனைத்து இருப்புநிதியும் சரி செய்த பின்னர் நிகர இழப்பு பாதிக்கப்படுகிறது என்றால், அது சொத்து பக்கத்தில் காண்பிக்கப்படும். இந்த தொகை மேலும் பொறுப்புகள் பக்க இருப்புநிதியிலிருந்து இருந்து கழிக்கப்பட முடியும். அந்த நேரத்தில், நாம் சொத்து பக்கத்தில் அதை காட்ட கூடாது.

இருப்புநிலை குறிப்பில் பொறுப்புக்கள் பகுதி
Liabilities are written in left side of company’s balance sheet. In these liabilities, we include.பொறுப்புகள் நிறுவனத்தின் இருப்புநிலை குறிப்பில் இடது பக்கமாக எழுதப்படுகிறது. இந்த பொறுப்புகளில், கீழ்கண்டவை அடங்கும்.
1. பங்கு மூலதனம்

நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில், நாம் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம், சந்தா செலுத்த பட்ட மூலதனம், அழைக்க பட்ட மூலதனம், செலுத்திய மூலதனம் ஆகியவற்றை காட்ட வேண்டும். செலுத்தப்பட்ட மூலதனத்தை கணக்கிடுவதற்கு, நாம் செலுத்தப்படாத அழைப்புகளை கழித்து மற்றும் அசல் செலுத்திய  பறிமுதல் பங்குகளின் அளவை சேர்க்க வேண்டும்.

2. கையிருப்பு மற்றும் உபரி

பின்வரும் இருப்புக்களை நிறுவனத்தின் இருப்புநிலை குறிப்பில் பொறுப்புக்கள் பக்கம் காண்பிக்க வேண்டும்.

i)                    மூலதன இருப்புக்கள்
ii)                   பங்குகளின் மிகை மதிப்பு கணக்கு
iii)                 மற்ற இருப்புகள்
iv)                 லாபம், போனஸ் அல்லது இருப்பு வழங்கிய பின்னர் இலாப நட்ட கணக்ககில் அதிகமாக உள்ள வருமான மிகுதி.
v)               கடன் தீர் நிதியம்

3. பாதுகாக்கப்பட்ட கடன்

கடன் பாதுகாப்பிற்காக எந்த சொத்தையாவது அடகு வைத்து பிறகு நிறுவனம் கடன் வாங்கி இருந்தால், அது பாதுகாக்கப்பட்ட கடன் பகுதியில் காண்பிக்கப்படும். அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

i)                   கடன் பத்திரங்கள்
ii)                   துணை நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட கடன் மற்றும் முன்பணம்
iii)                 மற்ற கடன்கள் மற்றும் முன்பணம்
iv)                 பாதுகாக்கப்பட்ட கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டி

4. பிணையற்ற கடன்கள்

தொடர்வன பாதுகாப்பற்ற கடன்களின் பட்டியல்.

i)                    பொதுமக்களின் வைப்பு நிதி
ii)                 குறுகிய கால கடன்கள் மற்றும் முன்பணம்
iii)                 பிற கடன்கள்

5. நடப்பு பொறுப்புகள் மற்றும் முன்ஏற்பாடுகள்


All liabilities which is payable within one year, will be included in current liabilities head. 
ஓராண்டுக்குள் செலுத்தப்படவேண்டிய அனைத்து பொறுப்புகளும், நடப்பு கடன் பொறுப்புகள் தலைப்பில் சேர்க்கப்படும்.

A) நடப்பு பொறுப்புகள்

  1. ஏற்கபட்ட அல்லது செலுத்த பட வேண்டிய பட்டி
  2. சில்லரை கடன்காரர்கள்
iii)                 கடனுக்கான வட்டி தவிர மற்ற வட்டி
iv)                 செலுத்த வேண்டிய செலவுகள்

B)      முன் ஏற்பாடுகள்

  1. வரிகளுக்கான முன் ஏற்பாடுகள்
  2. முடிவு செய்யப்பட்ட இலாபம்
  3. வருங்கால வைப்புநிதிக்கான முன் ஏற்பாடுகள்
  4. காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஊழியர்கள் நன்மை திட்டங்களுக்கான முன் ஏற்பாடுகள்
  5. மற்ற முன் ஏற்பாடுகள்

6. எதிர்பார பொறுப்புகள்

இந்த வகையான பொறுப்புகள் இருப்புநிலை குறிப்பில் காண்பிக்க முடியாது. ஆனால் ஒரு எளிய அடிக்குறிப்பில் அதன் விவரம் கொடுக்கபட வேண்டும். பின்வருவன நிறுவனத்தின் எதிர்பார பொறுப்புகளாக இருக்கலாம்.

  1. நிறுவனத்திற்கு எதிரான கோரிக்கைகள் கடன்கள் இல்லை
  2. செலுத்த பட்ட பங்குகளின் அழைக்கபடாத பொறுப்புகள் 
  3. நிலையான ஒட்டுமொத்த லாப பகுதிகள்
  4. நிறுவனத்தின் மற்ற எதிர்பார பொறுப்புகள்

Read it in English at here.

COMMENTS

BLOGGER: 1
Loading...
Name

teacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்
false
ltr
item
கணக்கியல் கல்வி: ஐந்தொகை
ஐந்தொகை
கணக்கியல் கல்வி
http://ta.svtuition.org/2013/12/balance-sheet-in-tamil-language.html
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/2013/12/balance-sheet-in-tamil-language.html
true
8024029832332814303
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago