Archive Pages Design$type=blogging

தன்னம்பிக்கை பெறுவது எப்படி?

அன்பானவர்களே! வாழ்க்கை என்பது ஓடிக்கொண்டிருக்கும் நீர் போல.  உங்களிடம் தன்னம்பிக்கை இல்லையென்றால் உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாத...

அன்பானவர்களே! வாழ்க்கை என்பது ஓடிக்கொண்டிருக்கும் நீர் போல.  உங்களிடம் தன்னம்பிக்கை இல்லையென்றால் உங்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.  நான் உங்களுக்கு தன்னம்பிக்கை பெறுவது எப்படி என்று சொல்கிறேன்.


தன்னம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருள் அல்ல.  நீங்கள் கடினமாக முயற்சி செய்தால் தன்னம்பிக்கை பெறும் வழிகளை கற்றுக் கொள்ளலாம். வழிகள் மிகவும் எளியவையே.  இவற்றை முறையாக கடைப்பிடிப்பது முக்கியமானது.
நான் இந்த வழிகளை ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன்.  இந்த வழிகளை பின்பற்றி பல் லட்சகணக்கான பிரபலமானவர்கள் தன்னம்பிக்கை பெற்றிருக்கிறார்கள்.

1. பயம் உங்களுடைய முதல் பலவீனம்

நீங்கள் யாருக்காவது, எதற்க்காகவாது அல்லது எந்த இடத்திற்காகவது பயந்தீர்கள் என்றால் அதுதான் உங்களுடைய பலவீனங்களின் பட்டியலில் முதலில் இருக்கும்.  முதலில் நீங்கள் எதற்க்காகவும் பயப்படகூடாது.  கடவுள் தான் உங்களுடைய உண்மையான தந்தை.  கடவுள் உங்கள் துணை இருக்கும் போது எதற்க்காக பயப்பட வேண்டும்.  உங்களின் கைகளை கடவுள் பற்றிக் கொண்டு இருக்கும் போது நீங்கள் எதற்க்காகவும் யாருக்காகவும் பயப்பட வேண்டாம்.  நான் இதை செய்தால் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைக்காதீர்கள்.

2. நேர்மறையாக சிந்திப்பதுதான் உங்களுடைய முதல் சவால்
நீங்கள் எதிர்மறையாக சிந்திப்பவரானால் நேர்மறையாக சிந்திப்பதுதான் உங்களுடைய முதல் சவால்.  நேர்மறையாக சிந்தியுங்கள் ஏனென்றால் நீங்கள்தான் கடவுளின் முதன்மையான படைப்பு.  உங்கள் முதல் பணி கடவுளின் வழிகாட்டுதலின் படி நடப்பதுதான்.  இது உங்களுடைய தன்னம்பிக்கையையும் சக்தியையும் அதிகரிக்க உதவும்.

3. கடவுளை நம்புவதுதான் உங்களுடைய முதல் உறுதிப்பாடு

இதயபூர்வமாக கடவுளை நம்புங்கள்.  மனப்பூர்வமாக கடவுளை நம்புங்கள்.  உங்களுடைய ஒவ்வொரு உடல் உறுப்பின் மூலமாக கடவுளை உணருங்கள்.  கடவுள் அன்பானவர் என்று அறியுங்கள்.  கடவுள் ஒரு சிறந்த நீதியாளர், ஆசிரியர் என்று அறியுங்கள்.  நீங்கள் எதில் பலவீனமாக இருக்கிறீர்களோ அதில் கடவுள் சிறந்தவர் என்று அறியுங்கள்.  அப்படியென்றால் நீங்கள் ஏன் கடவுளிடம் சக்தி வேண்டி பிரார்த்தனை செய்ய கூடாது.  உங்களுக்கு பாடும் திறமை இல்லையென்றால் இயற்கையின், மரம், செடி கொடிகளின், மிருகங்களின், பறவைகளின் பாடல் மற்றும் சங்கீதத்தை கேளுங்கள்.  இதுதான் கடவுளின் சக்திக்கு எடுத்துக்காட்டு.  அவனிடமிருந்து நேரடியாக சக்தியை பெறுங்கள்.

4. மனத்தை வெற்றி கொள்வதே உங்களின் முதல் வெற்றி


கடவுள் உங்களை தன்னம்பிக்கை உள்ளவராகவும் வெற்றி பெறவும் உங்களுக்கு சோதனைகள் தருகிறார்.  கடவுள் உங்களை இதயம், மூளை, நுரையீரல், கண்கள் மற்றும் பல உருப்புகள் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.  அவற்றை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் கடவுளை நண்பனாக்க முடியும்.  நீங்கள் அவற்றின் கட்டுப்பாட்டை இழப்பதின் மூலம் கடவுள் உங்களை கட்டுப்படுத்துகிறார்.  அதனால் உங்கள் மனதை கட்டுப்படுத்துங்கள்.  இதுதான் கடவுள் தரும் சோதனை.  மனதை வெற்றி கொள்வதே உண்மையான வெற்றி.  தன்னம்பிக்கை பெறுவது இரண்டாவது வெற்றி. அதனால் முதல் வெற்றியை அடைய முயலுங்கள்.

5. நேரத்தை இழப்பதே உங்கள் முதல் இழப்பு.

நீங்கள் 24 மணி நேரத்திற்குள்ளாகவே தன்னம்பிக்கை பெற முடியும், இது உண்மை, நீங்கள் 24 மணி நேரத்தையும் வீணடிக்காமல் இருந்தால்.  ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்ததே 24 மணி நேரம் என்பார்கள்.  நீங்கள் தன்னம்பிக்கை பெற வேண்டுமானால் உங்களுக்கு பல வருடங்கள் தேவைப்படும் என்பது முற்றிலும் தவறானது.  தன்னம்பிக்கை அடைய சில நொடிகளே போதுமானது.  ஆனால் அதற்கு நீங்கள் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் உழைக்க தயாராக வேண்டும்.

உங்களுக்கு 2012 ல் நடந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் பற்றி தெரியுமா?  அவர் 9.63 வினாடிகளில் 100 மீட்டரை கடந்தார்.  தன்னம்பிக்கை இருந்ததின் மூலமாகதான் அவர் இந்த சாதனையை அடைய முடிந்தது.  அவர் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் பயிற்சி செய்ததால்தான் சில நொடிகளில் அந்த சாதனையை செய்ய முடிந்தது.


Read it also in English at here.

COMMENTS

BLOGGER: 1
Loading...
Name

teacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்
false
ltr
item
கணக்கியல் கல்வி: தன்னம்பிக்கை பெறுவது எப்படி?
தன்னம்பிக்கை பெறுவது எப்படி?
கணக்கியல் கல்வி
http://ta.svtuition.org/2013/12/self-confidence-article-in-tamil.html
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/
http://ta.svtuition.org/2013/12/self-confidence-article-in-tamil.html
true
8024029832332814303
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago