நீங்கள் இந்த வரிகளை என்னுடைய இணையதளத்தின் பெயரின் கீழ் பார்த்திருப்பீர்கள். நான் இதை ஏன் எழுதினேன் என்று நினைக்கிரீர்களா? இந்த வரிகளின் ...
நீங்கள் இந்த வரிகளை என்னுடைய இணையதளத்தின் பெயரின் கீழ் பார்த்திருப்பீர்கள். நான் இதை ஏன் எழுதினேன் என்று நினைக்கிரீர்களா? இந்த வரிகளின் முக்கியத்துவம் என்ன? இதன் அர்த்தம் என்ன? கணக்கியலில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் திறமையடைவது எப்படி? இன்று நான் இந்த கேள்விகளுக்கு பதில்களை படிப்படியாக சொல்கிறேன்.
கேள்வி: திறமை பெறுவதின் அர்த்தம் என்ன?
பதில்: நாமே நம் பலவீனங்களை எதிர்க்கொண்டு மேன்மையடைய வேண்டும். ஓட்ட பந்தயத்தில் ஓடும் வீரர்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவதற்க்காக ஓடுகிறார்கள். ஆனால் யாரேனும் ஒருத்தர் மட்டுமே வெற்றி பெறுகிறார். இதை போல வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில் நீங்கள் உங்கள் பலவீனங்களை எதிர்த்து ஓட வேண்டும். ஒருவேளை நீங்கள் கணக்கியலில் தேர்ச்சி பெறாவிட்டாலும் உங்கள் பலவீனங்களை எதிர்த்து நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
நீங்கள் பாடங்களை அட்டவணை போட்டு தேர்வுக்கு படிக்க வில்லையென்றால், அடுத்த தேர்விற்க்கு அட்டவணையை போட்டு படித்தால் நீங்கள் தேர்வில் வெற்றி பெறாலாம். இப்படியாகத்தான் நீங்கள் கணக்கியலில் திறமை பெற முடியும்.
ஒருவேளை யாரவது உங்களை ‘ஏன் உங்களுக்கு Google நிறுவனத்தில் வேலை செய்வது பிடித்திருக்கிறது’ என்று கேட்கும் போது, நீங்கள் பணம் மற்றும் அவர்கள் தரும் வசதி வாய்ப்புகளுக்காகதான் அங்கு வேலை செய்கிறேன் என்றால், பொது மக்கள் உங்களை பற்றி படிக்கும் போது கண்டுக்கொள்வார்கள். நீங்கள் பணத்திற்க்காக எப்பொதும் வேலை செய்யாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் சுயநலமற்ற குறிக்கோள் வேண்டும்.
மேலே குறிப்பிட்டது ஒரு உதாரணம் தான். நான் Google நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளை பற்றி படித்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், அறிவாளிகள், பணத்திற்காக மட்டும் வேலை செய்பவர்கள் அல்லர். அவர்கள் தங்களது நேரம் மற்றும் உழைப்பை சுவாமி விவேகானந்தர் போல Google க்காக செலவிட்டு Google லை உலகத்தின் மிகச்சிறந்த இணையதளமாக்க பாடுபடுகிறார்கள். அவர்களில் நிகேஷ் ஆரோரா மற்றும் அர்ச்சனா என்னும் இந்தியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நானும் அவர்கள் போல பணத்திற்க்காக மட்டும் வேலை செய்யாமல் பிறர் நலனுக்காகவும் உழைக்க விரும்புகிறேன்.
கேள்வி: கணக்கியலில் திறமை பெறுவதின் முக்கியத்துவம் என்ன?
பதில்: எப்போது நீங்கள் கணக்கியலில் திறமை பெறுகிறீர்களோ அப்போது நீங்கள் அதற்க்கான பலனை அடைவீர்கள். அனைவரும் உங்களை மதிப்பார்கள்.
கேள்வி: நான் ஏன் ‘கணக்கியலில் திறமை பெறுங்கள்’ என்று LOGO வின் அடியில் எழுத்தியிருக்கிறேன்?
பதில்: இதை எழுதுவதற்க்கு காரணம் நேர்மறையான எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்குவதற்க்குதான். நான் இந்த Accounting Education மூலமாக 2008 ல் இருந்து கல்வி கற்ப்பித்து வருகிறேன். ஒரு நாள் நான் உங்களுக்கு தேர்வு வைத்து அதற்க்கான மதிப்பெண்ணையும் கொடுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவேளை அந்த தேர்வில் நீங்கள் மதிப்பெண் குறைவாக வாங்கிவிட்டீர்கள் என்றால் நீங்கள் மனமுடைந்து போவீர்கள். E-mail சந்தாவையும் Accounting Education ல் இருந்து நீக்கி கொள்வீர்கள். அதற்க்காகதான் அந்த ‘கணக்கியலில் திறமை பெறுங்கள்’ என்பதை எழுதியிருக்கிறேன்.
ஏனென்றால் நான் ஒரு ஆசிரியராக உங்கள் எல்லோர் மீது,ம் அன்பு வைத்திருக்கிறேன். நான் உங்களை என் பிள்ளைகளாகவும் உடன் பிறந்தவர்களாகவும் தாய் தகப்பன்களாகவும் பார்க்கிறேன். நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் என்னுடைய மாணவர்கள். நீங்கள் ஆசிரியர் வினோத் குமாரின் மாணவர்கள்..
கேள்வி: கணக்கியலில் திறமை பெறுவது எப்படி?
பதில்: நீங்கள் உங்கள் பலவீனங்களை நீக்குவதன் மூலமாக கணக்கியலில் திறமை பெற முடியும். கணக்கியல் மிகப்பெரிய பாடம். நீங்கள் கணக்கியலில் இருப்பதால் தொழில் நிலை பற்றியும், சந்தைபடுத்துதல், நிதியகம், பணியாளர் பகுத்தல், ஆய்வுகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அதை நீங்கள் ஓரே நாளில் கற்க்க முடியாது. அதனால் பின்வரும் பலவீனங்களை நீக்கி கணக்கியலில் திறமை பெறுங்கள்.
முதல் பலவீனம்: உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அலட்சியப்படுத்துதல்
உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்களிடம் எது இருக்கிறதோ அதை வைத்து எது இல்லையோ அதை பெறுங்கள்.
இரண்டாவது பலவீனம்: படிப்பதை நிறுத்துவது
படிப்பதை நிறுத்தினால் உங்கள் வளர்ச்சியும் நின்றுவிடும்.
மூன்றாவது பலவீனம்: கொடுப்பதற்க்கு முன்னால் பெறுவதற்க்கு முயலுவது
இதுவும் ஒரு பலவீனம் தான். முதலில் கொடுப்பதற்க்கு முயலுங்கள். கொடுப்பதன் முலமாக அதாவது அடுத்தவர்க்கு பயிற்றுவிப்பதன் மூலமாக நீங்கள் அறிவை பெறுக்கிகொள்ள முடியும்.
நான்காவது பலவீனம்: குறிக்கோள் இல்லாமல் இருப்பது
நான்காவது பலவீனம்: குறிக்கோள் இல்லாமல் இருப்பது
குறிக்கோள் இல்லாமல் இருந்தால் எதையும் அடைய முடியாது. இருட்டில் நடந்தால் கதவை திறக்க முடியாது. குறிக்கோள் என்னும் ஒளி ஏற்றுங்கள்.
ஐந்தாவது பலவீனம்: முயற்சியை கைவிடுவது
முயற்சியை கைவிடாதீர்கள். எறும்பு 100 தடவைகள் முயற்சி செய்து ஒரு அரிசி பருக்கையை சுமந்து செல்கிறது. நீங்கள் 10 தடவையாவது முயற்சி செய்ய முடியாதா? மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி பெறுவது உறுதி.
ஆறாவது பலவீனம்: நீங்கள் மட்டுமே முக்கியமானவர் என்று நினைப்பது
ஏழாவது பலவீனம்: சந்தர்ப்பங்களுக்காக காத்திருப்பது
எட்டாவது பலவீனம்: கனவு காணாதிருப்பது
.............................................................................
............................................................................
............................................................................
நீங்களே உங்கள் பலவீனங்களை பட்டியலிடுங்கள் மேலும் அவற்றை நீக்க முயலுங்கள். வாழ்த்துக்கள்.
Read it in English at Here.